2022 ஜூலை 04, திங்கட்கிழமை

“கோட்டா கோ கம”வுக்கு துவிச்சக்கரவண்டியில் வருகிறார்

Editorial   / 2022 மே 20 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன்

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பஸ்தர்,  துவிச்சக்கர வண்டியில் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

அவர், தனது பயணத்தை விசுவமடு சந்தியில் இன்று (20) காலை ஆரம்பித்தார்.   

கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம் ஜனகவர்மன் (வயது 32)  என்பவரே பயணத்தை ஆரம்பித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் “கோட்டா கோ கம” போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  துவிச்சக்கர வண்டியில் நான்கு நாட்கள் பயணித்து சென்றடைய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு மக்களும் ஆதரவளித்து வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .