2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

என் மனைவி ஹவ்லத்

Niroshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலை எழுந்து வந்து
கனிவுடனே என்னை எழுப்பி
பாலைக் கரம் ஏந்தி
பனிவுடனே வந்து நிற்பாள்.

வேலை நான் செல்ல
வேண்டும் பணி செய்து
வாலை வந்தெனக்கு
வழிகாட்டி நின்றிடுவாள்.

மாலை வரும் பொழுது
மகிழ்வுடனே எனை அணைத்து
சோலை மணம் பரப்ப
சொந்தம் கொண்டாடிடுவாள்.

ஏழை என் மனதை
என்னாளும் மகிழ்வித்து
ஓலைக் குடிசையிலே
ஒற்றுமையாய் வாழுகிறாள்.
 

-பி.எம்.எம்.ஏ.காதர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X