2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

தலையெழுத்து

Niroshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}இகழுத்தில் கிடந்த தாலியும் - வங்கிக்
கணக்கில் ஏலம் போனது – உழைத்துக்
குடி காக்க வேண்டிய தந்தையும்
குடி வீடு குடியேறிவிட
படித்துப் படித்து
பல்கலையும் முடித்து
வேலையொன்றும் கிடைத்திடாமல்
தம்பியும் - வீட்டு
மூலையில் சுருண்டுவிட்டான்.

கடைசித் தங்கை காவியா
அம்மா, பசிக்கு உணவு தருவியா
சேலை முந்தானை பிடித்து
இன்னும் அழுதபடி.....
சுடலை செல்லும் வயசிலும்
மணப்பெண்
படலை தாண்ட வழியின்றி
விடலை தாண்டியும் வீட்டில்
முடங்கியே கிடக்கிறேன்.

சீதனப்பேய் விரித்த
வ(வி)லையதில் சிக்கிய
கன்னிமானாய்....
இதுதான் என்
தலையெழுத்துப் போலும

-மல்லாவி கஜன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .