2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

136 கிராம சேவையாளர்களுடன் சந்திப்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், கிராமத்துக்கு மூன்று மில்லியன் ரூபாய் திட்டம் தொடர்பில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 136 கிராம  சேவையாளர்களுடனும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான், இன்று (27)  சந்திப்புகளை நடத்தி, கலந்துரையாடியுள்ளார்.

 துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, வெலிஓயா ஆகிய பிரதேச  செயலாளர் ஊடாக, கிராம சேவையாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது, "இந்தத் திட்டத்துக்காக கிராமங்களில் இருந்து மக்களின் தேவைப்பாடுகளை மக்களே அடையாளப்படுத்த வேண்டும். இதில், கிராமத்துக்குரிய தேவை மாத்திரம் உள்ளடக்கப்பட வேண்டும்.

முதற்கட்ட தேவை, இராண்டாம் கட்ட தேவை என தேவைகளை முன்மொழிவதன் ஊடாக, இது அடுத்த ஆண்டுக்கு இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்திய அறிக்கையொன்றை கிராமங்களில் இருந்து தயாரிக்க வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .