2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

கோபியின் தாயார் விடுதலை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா நெடுங்கேணியில் சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் தாயார் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவருடனும் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்த 18 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனாலும், இந்த எண்ணிக்கையை அதிகாரபூர்வமாக உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை.

கொழும்பு தெஹிவளையில் கைது செய்யப்பட்ட, பேக்கரி ஒன்றில் பணியாற்றியவர்கள் என சொல்லப்படுகின்ற 8 பேரும் விடுதலை செய்யப்பட்டவர்களில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.(பிபிசி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .