2022 ஜனவரி 22, சனிக்கிழமை

’25ஆம் திகதியிலிருந்து பணிகள் மீள ஆரம்பம்’

Niroshini   / 2021 நவம்பர் 23 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், செ. கீதாஞ்சன்

கொவிட் - 19 காரணமாக மூடப்பட்டிருந்த முல்லைத்தீவு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள பணியானது, நவம்பர் 25ஆம் திகதியில் இருந்து மீளவும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் அறிவித்துள்ளார்.

இருப்பினும், சாரதி அடையாள அட்டைகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதியிலிருந்தே இடம்பெறும் என்பதுடன், அனைத்து சேவைகளும் கட்டாயமாக 021 2117116 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, திகதி மற்றும் நேரத்தை முற்பதிவு செய்த பின்னர் வருகைதர வேண்டுமெனவும், அவர் அறிவித்துள்ளார்.

மேலும் திகதி மற்றும் நேரத்தை முற்பதிவு செய்யாது வருகை தரும் சேவை பெறுநர்களுக்கான சேவையை வழங்குவதற்கு இயலாதநிலை ஏற்படுமெனவும், அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X