2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி திட்டம் ஆரம்பம்

Editorial   / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய தடுப்பூசி செயற்றிட்டத்தை ​துரிதப்படுத்தும் வகையில், நடமாடும் தடுப்பூசி ​திட்டத்தை இராணுவம் ஆரம்பித்துள்ளது.

மேல்மாகாணத்துக்குள் இதுவரையிலும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத வயதானவர்கள், ​வெவ்வேறு தேவைகளை உடையவர்கள் ஆகியோருக்காக, இந்த நடமாடும் தடுப்பூசி செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இராணுவ தலைமையகத்தில் இருந்து இந்த செயற்றிட்டம், கொவிட்-19 செயலணியின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, நேற்று (12) ஆரம்பித்துவைத்தார்.

  1. தெமட்டகொட பிரதேசத்தை உள்ளடக்கும் வரையில் ஒரு வாகனமும்.
  2.  கொழும்பு-15, முகத்துவாரம் பிரதேத்தை உள்ளடக்கும் வகையில் 3 வாகனங்கள்.
  3. கங்காராம மாவத்தை- மட்டக்குளிய பிரதேசத்தை உள்ளடக்கும் வகையில் ஒரு வாகனம்.
  4. கொழும்பு-14, கிராண்பாஸ் பிரதேசத்தை உள்ளடக்கும் வகையில் மூன்று வாகனங்கள்.
  5. கொழும்பு-15 புளுமென்டல் பிரதேசத்தை உள்ளடக்கும் வகையில் இரண்டு வாகனங்கள்

என்றடிப்படையில் 10 வாகனங்கள் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .