2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

சட்டவிரோத கட்டடங்களை அகற்ற நடவடிக்கை

Editorial   / 2020 மே 24 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்கம பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை, நாளை (25) அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதேச சபையின் தவிசாளர் டி.நிமல் தெரிவித்தார்.

ரத்கம பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படும் உறுப்பினர்கள் தங்களது பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் வழங்கிய தகவலுக்கு அமைவாகவே, கட்டடங்கள் தகர்க்கப்படவுள்ளன.

சட்டவிரோதக் கட்டடங்களால், சுற்றுச்சூழல் பிரச்சினை ஏற்பட்டுள்ளதுடன், இதுவரை வெள்ளத்தால் பாதிக்கப்படாத பிரதேசங்களும் இம்முறை வெள்ளத்தில் மூழ்கியதாகவும் இதனைக் கருத்திற்கொண்டே, சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X