2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

பெண்ணைத் தாக்கிய பிரதானிக்குப் பிணை

R.Maheshwary   / 2020 நவம்பர் 25 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா-உடுகம்பொலயில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெண் நிர்வாக அதிகாரி ஒருவரை, அலுவலகத்துக்குள் வைத்து, தாக்கிய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலா இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணை இரண்டில் முகாமையாளரை விடுவிக்குமாறு கம்பஹா பிரதான நீதவான் மஞ்சுள கருணாரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

அலுவலகமொன்றில் பணிப்புரியும் பெண் மீது உயர் அதிகாரியொருவர் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படும் வீடியோ ஒன்று நேற்று  சமூக வலைத்தளங்களில் வெளியான
நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பெண் உத்திரயோகத்தரைத்  தாக்கிய நபர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .