2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

கொழும்பி​ல் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

R.Maheshwary   / 2021 மே 17 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 15 நாள்களில் நாடுபூராகவும் 430 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனரென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் இனம் காணப்பட்டுள்ளனரென, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 15 நாள்களில் கொழும்பில் 150 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனரென்றும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 7,317 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளதுடன்,  இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகம் ​டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென்றும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .