2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

பாலியல் நடவடிக்கைக்காக சிறுமி விற்பனை: 28 பேர் கைது

Editorial   / 2021 ஜூலை 04 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸையில் வைத்து, 15 வயதான சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனைச் செய்தனர், பிரசாரம் செய்தனர், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டுகளின் கீழ், இதுவரையில், 28 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், மிஹிந்தலை பிரதேச சபையின் உப-தவிசாளர், பிக்கு, கோடீஸ்வர வர்த்தகர், கப்பல் கெப்டன், ஓட்டோ சாரதி உள்ளிட்டவர்களும் அடங்குகின்றனர்.

சிலரிடம், சுமார் 3 இலட்சம் ரூபாய்க்கு விலை பேசி அச்சிறுமி விற்கப்பட்டுள்ளார். அதில், சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய், அச்சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

இதேவேளை, அவிசாவளையிலுள்ள கோடீஸ்வர வர்த்தகருக்கு அச்சிறுமியை 21 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .