2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

டின்கர் லசந்த சுட்டுக்கொலை

Editorial   / 2021 நவம்பர் 26 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர் என அறியப்பட்ட டின்கர் லசந்த என்றழைக்கப்படும் எச்.எல் லசந்த,  பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

களுத்துறை − தியகம பகுதியில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

'சன்ஷைன் சுத்தா' கொலையின் பிரதான சந்தேகநபரான இவர், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் ஆவார். அவர். மறைத்துவைத்திருந்த கைக்குண்டு மற்றும் துப்பாக்கியை காண்பிப்பதற்காக, அழைத்துச் சென்றபோதே, பொலிஸாரின் மீது அவர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன்பின்னர், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தற்பாதுகாப்பு தாக்குதலின் போதே, மேற்படி நபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .