2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

இலங்கை பணிப்பெண்ணின் சடலம் கொண்டுவரப்பட்டது

Editorial   / 2021 மே 10 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைட்டில் பணிப்பெண்ணாக  பணிபுரிந்து வந்த மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த   39 வயதான இலங்கைப் பெண்ணொருவர்,  எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த  பணிப்பெண் ஒருவரால் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி கொலைசெய்யப்பட்டார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து  அவர் கொல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பெண்ணின் சடலம்  நேற்றுக் காலை கட்டார் ஏர்வேஸ் விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குக்  கொண்டுவரப்பட்டதாக   பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .