2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மகனின் திருமணத்தை இரத்து செய்த இராஜாங்க அமைச்சர்

Editorial   / 2021 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய ஒரேயொரு மகனின் திருமண வைபவத்தையும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே இரத்து செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகவே அந்த திருமண வைபவம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளேயின் ஒரேயொரு மகனான பானுக்க பெர்ணான்டோ புள்ளேக்கு, கொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில்,   திருமணம் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், இருதரப்பு குடும்பத்தாருடன், மதவழிபாட்டுகளில் மட்டும் ஈடுபட்டு திருமணம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்  ஒருவாரத்துக்கு முன்னர், நடைபெற்ற கொ​விட்-19 செயலணியின் கூட்டத்தில் திருமண வைபவங்களில், விருந்தனர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளேயே யோசனையை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .