Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 மே 11 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூகவலைத்தள செயற்பாட்டாளரும் அரகலவின் முன்னணிலை உறுப்பினருமான பிரியன் நிக்கேஷலவின் மீது தாக்குதல் நடத்தி கடுவளை முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவுக்கு எதிராகவும், சந்திக அபேரத்னவின் மீது தாக்குதல் நடத்தியதாக பிரியன் நிக்கேஷலவுக்கு எதிராகவும் செய்யப்பட்ட இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி அறிக்கையிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பில் தலங்கம பொலிஸார், நீதிமன்றத்தில் அறிக்கையிட்டனர். எனினும் வைத்தியசாலையில் இருக்கும் இவ்விரு சந்தேகநபர்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரிக்கு கடுவளை நீதவான் ஷானிமா விஜேபண்டார கட்டளையிட்டார்.
அவ்விரு சந்தேகநபர்களுக்கும் பிணை வழங்க முடியுமா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு கொழும்பு-08 நீதவான் நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றுவதற்கும் கடுவளை நீதவான் கட்டளையிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago