2022 ஜூலை 07, வியாழக்கிழமை

பப்பி கைது

Editorial   / 2021 ஜூலை 15 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் பிரபல வர்த்தகரான பப்பி என்றழைக்கப்படும் 36 வயதான நபரொருவர், தங்காலை பகுதியில் வைத்து, நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். இவர், ஒரு படகோட்டி என பொலிஸார் தெரிவித்தனர். 

ஒரு தொகை போதைப்பொருளை, கடந்த பெப்ரவரி மாதம் தனது படகின் மூலமாக அவர், கரைக்கு எடுத்துவந்துள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.   

போதைப்பொருள்களுடன் ஆயுதங்கள் சிலவற்றையும் அவர், கரைக்கு கொண்டுவந்துள்ளார் என விசாரணைகளின் ஊடாக கண்டறிப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.  

பொலிஸாரின் கண்களுக்கு மண்ணைத் தூவிக்கொண்டு பல நாள்களாக மறைந்திருந்த மேற்படி நபர்,   போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .