Kogilavani / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
சரணாலயங்கள் மற்றும் காடுகளில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள 200 குளங்களைப் புனரமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கமநல சேவைகள் மற்றும் வனஜீவ அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, வனஜீவ பணிப்பானர் நாயகம் சந்திராவங்ச பத்திராஜவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
காடுகளில் வசிக்கும் மிருகங்கள் உரிய நேரத்தில் குடிநீரை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரட்சியான காலங்களில் நீரினைப் பெற்றுக் கொள்வதற்காக மிருகங்கள் மக்கள் வசிக்கும் எல்லைக்குள் பிரவேசிப்பதால் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே இவற்றை தவிர்த்துக்கொள்வதற்காக இக் குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.
யால, வில்பத்துவ, உடவலவ, மின்னேரியா, கௌடுள்ள, வஸ்கமுவ , குமன ஆகிய பகுதிகளில் 50 குளங்கள் புனரமைப்பிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன என வனஜீவ பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
41 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago