2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

ஒன்லைன் வகுப்புகள்; ஓர் ஆசிரியர் பார்வை

Editorial   / 2020 ஜூன் 22 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்லைன் வகுப்புகள் தேவையில்லை என்று அதை எதிர்மறையாகப் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை. மாறிவரும் சூழலுக்கேற்ப, அலைபேசிகளையும் கணினிகளையும் கல்விச்செயற்பாடுகளில் எப்படிப் பயன்படுத்துவது, எவ்வளவு என்பதே நாம் விவாதிக்க வேண்டியது.   

சிறிய குழந்தைகளும்கூட எவ்வளவு வேகமாக இத்தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதை அறிவோம். அதை நேர்மறையாக எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பேச வேண்டிய காலக் கட்டாயத்தில் இருக்கிறோம். பல நாள்கள் பள்ளி செல்லாத நிலையில் கற்பித்தல் பணிகளை ஒன்லைன் வகுப்புகள் மூலம் ஓரளவாவது சரிக்கட்ட முடியும். அதைக் கட்டாயப்படுத்தாமல் மிகக் குறைந்த அளவில் சோதனைமுயற்சியாக ஒவ்வொரு பள்ளியிலும் முயலலாம்.  

தற்போது 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களிடம் கணிப்பொறிகள் இருக்கின்றன. எனவே அவர்களிடமிருந்துகூடத் தொடங்கலாம். ஒன்லைன் வகுப்புகள் ஏற்படுத்தக்கூடிய சிக்கல்களை யோசிக்காமல் இதைச் சொல்லவில்லை. ஆசிரியர்களின் இடத்தைத் தொழில்நுட்பங்களைக்கொண்டு எக்காலத்திலும் நாம் நிரப்ப முடியாது. ஆனால் பள்ளி திறக்க முடியாத சூழலில், மாணவர்களின் அறிவை விரிவாக்க இத்தகைய நுட்பங்களை நாம் பயன்படுத்த வேண்டும்.   

தனியார் பள்ளிகளிலும் ஒருபக்கம் காசு பிடுங்குவதற்காக என்று சிந்திப்பதன் பிறிதொரு கோணத்தில், இக்கொடுமையான காலகட்டத்தில் ஆசிரியர்களின் பணியிடத்துக்குப் பாதிப்பு வராமல் பாதுகாக்கவும் ஒன்லைன் வகுப்புகள் பயன்படும்.   
ஒன்லைன் வகுப்புகள் தேவையில்லை, தடை செய்ய வேண்டும் என்று பேசுவதை விடவும் இதை நாம் எப்படிக் குழந்தைகள் நலனுக்கேற்றதாக மாற்றிக்கொள்ளப் போகிறோம் என்று யோசிக்கலாமே?  

-தி.பரமேசுவரி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .