2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

எதிர்க்கட்சியில் இணைந்த முன்னாள் சபாநாயகர்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 20 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியில் தான் இணைந்துள்ளதாக, பாராளுமன்றத்தின் கீழவையின் முன்னாள் சபாநாயகர் ஜோன் பெர்கெள நேற்று தெரிவித்துள்ளார்.

தனது அரசியல் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தை கன்சவேர்ட்டிவ் பாராளுமன்ற உறுப்பினராகவே பெர்கெள களித்திருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதிலும், பாராளுமன்றத்தை நடத்தியதிலும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், முன்னாள் பிரதமர் தெரேசா மேயுடன் பெர்கெள முரண்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்சவேர்ட்டிவ் கட்சியானது பிற்போக்குதனமாக, பரப்பிய பெருந்திரள்வாதமாக, தேசியவாதமாக, சில நேரங்களில் இனவாதமாக இருப்பதாக தான் இப்போது நம்புவதாக பெர்கெள தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை சபாநாயகராக பெர்கெள காணப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .