2023 ஜூன் 01, வியாழக்கிழமை

நடுவர்களுக்குப் பிரியாணி கொடுத்ததால் பரபரப்பு

Ilango Bharathy   / 2023 மார்ச் 02 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானிலுள்ள பிரபல தொலைக்காட்சியொன்றில் ‘தி கிச்சன் மாஸ்டர் ‘ என்ற பிரபல சமையல் போட்டி  நிகழ்ச்சியொன்று நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர் ஒருவர் பிரபல கடையிலிருந்து வாங்கி வந்த பிரியாணியை நடுவர்களுக்கு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த போட்டியாளரை நடுவர்கள் நிராகரித்துள்ள நிலையில் ஆத்திரமடைந்த போட்டியாளர்  “இந்த நிகழ்ச்சியில் நடுவர்கள் ருசிப்பதற்காக  வழங்கப்படும் உணவானது  நீங்கள் தயாரித்ததாக இருக்க வேண்டும் என யாரும்  என்னிடம் கூறவில்லை. அதனால் தான் நான் இந்த பிரியாணி பார்சலை வாங்கி வந்தேன்.

 இதனை வாங்குவதற்கு நான் வெகு நேரமாக வரிசையில் நின்று கடுமையாக உழைத்து உள்ளேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறித்த  நிகழ்ச்சியிலிருந்து வெளியேற மறுத்ததால் அவருக்கும் நடுவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இம்மோதலையடுத்து நடுவர்களில் ஒருவர் ஆத்திரமடைந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .