2021 ஜூலை 28, புதன்கிழமை

விண்வெளிக்குச் செல்லவுள்ள அமெஸொனின் பெஸோஸ்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 08 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது றொக்கெட் நிறுவனமான புளூ ஒரிஜினின் முதலாவது ஆளுள்ள விண்வெளிப் பயணத்தில் அடுத்த மாதம் தானும், தனது சகோதரர் மார்க்கும் பறக்கவுள்ளதாக, அமெஸொனின் நிறுவுநர் ஜெஃப் பெஸோஸ் நேற்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தான் ஐந்து வயதானதில் இருந்து விண்வெளிக்குப் பயணிப்பது குறித்து கனவு கண்டதாகத் தெரிவித்த பெஸோஸ், அடுத்த மாதம் 20ஆம் திகதி தனது சகோதரருடன் இப்பயணத்தில் பயணிக்கவுள்ளதாக, இன்ஸ்டாகிராம் பதிவொன்றில் பெஸோஸ் கூறியுள்ளார்.

புளூ ஒரிஜினின் முதலாவது விண்வெளிப் பயணதுக்கான ஆசனமொன்றுக்கான ஏலமொன்றின் வெற்றியாளருடன் பெஸோஸ் இணையவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .