2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

வெனிசுவேலாவில் இறந்தோரின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்தது

Editorial   / 2017 மே 22 , பி.ப. 11:02 - 1     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுக்கெதிரான போராட்டம், 7ஆவது வாரத்தை அடைந்துள்ள நிலையில், இளம் ஆர்ப்பாட்டக்காரரொருவர், துப்பாக்கிச் சூட்டினால், நெஞ்சில் ஏற்பட்ட காயத்தால் இறந்தமையையடுத்து, ஆர்ப்பாட்டங்களினால் இறந்தோரின் எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளது.  

மேற்கு நகரமான வலெராவில், கடந்த சனிக்கிழமை (20) இடம்பெற்ற அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டமொன்றில், துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்டது என நம்பப்படும் சம்பவத்திலேயே, 23 வயதான குறித்த இளம் ஆர்ப்பாட்டக்காரர், நெஞ்சில், துப்பாக்கிச் சன்னத்தால் துளைக்கப்பட்டதாக, அறிக்கையொன்றில், சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  

இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 18 வயதான ஆணொருவரும் 50 வயதான பெண்ணொருவரும் காயமடைந்ததாகவும், சட்டமா அதிபர் அலுவலகத்தின் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஜனாதிபதி மதுரோவைப் பதவியிலிருந்து அகற்றுவதற்காக, தேர்தல்களைக் கோரி, வெனிசுவேலா முழுவதும், கடந்த சனிக்கிழமை, ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற நிலையிலேயே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

சில நகரங்களில், ஆர்ப்பாட்டங்கள், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் அரசாங்கப் படைகளுக்குமிடையிலான வன்முறை மோதல்களாக மாறியிருந்தன.  

தலைநகர் கராகஸின் கிழக்குப் பகுதியிலுள்ள மாநகராச்சியொன்றின் மேயர், 46 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், புறநகர் சான் அன்டோனியோ லொஸ் அல்டோஸில், துப்பாக்கிப் பிரயோகத்தால் இளைஞரொருவர் காயமடைந்ததாக, மிராண்டா மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.     


  Comments - 1

  • முருகன் Monday, 22 May 2017 05:46 PM

    சோதனை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .