2021 ஜூலை 28, புதன்கிழமை

ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் கடவையை கைப்பற்றிய தலிபான்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 23 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் தஜிகிஸ்தான் உடனான பிரதான எல்லைக் கடவையை தலிபான் கைப்பற்றியுள்ளதாக குண்டூஸ் மாகாண சபை உறுப்பினர் கலிட்டின் ஹக்மி, இராணுவ அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

சில பாதுகாப்புப் படைகள் தங்களது நிலைகளை கைவிட்டதுடன், முன்னரங்கைத் தாண்டி வெளியேறியுள்ளனர்.

குண்டூஸ் நகரத்திலிருந்து 50 கிலோ மீற்றர் வடக்காகவுள்ள குறித்த ஷிர் கான் பன்டாரைக் கைப்பற்றியமையானது, ஐக்கிய அமெரிக்கப் படைகள் கடந்த மாதம் முதலாம் திகதி முதல் வெளியேற ஆரம்பித்த பின்னரான மிகவும் பிரதானமான தலிபானின் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

ஒரு மணித்தியால மோதலையடுத்து இன்று காலையில் ஷிர் கான் பன்டாரையும், தஜிகிஸ்தானுடனான அனைத்து எல்லைச் சோதனைச் சாவடிகளையும் தலிபான் கைப்பற்றியதாக ஹக்மி கூறியுள்ளார்.

இந்நிலையில், எல்லைக் கடவையைக் கைப்பற்றியதை தலிபான் பேச்சாளர் ஸபிஹுல்லாஹ் முஜாஹித் உறுதிப்படுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .