2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் றொக்கெட்டுகள்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 20 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை இன்று றொக்கெட்டுகள் தாக்கியதோடு, ஹஜ் பெருநாள் தொழுகையின்போது ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலும் தரையிறங்கியுள்ளன.

எவ்வாறெனினும், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கானியும், ஏனைய பலரும் வெளியக ஒன்றுகூடல் ஒன்றில் அமைதியாக தொழுகையைத் தொடர்ந்திருந்ததை சமூக வலைத்தள காணொளிகள் வெளிக்காட்டியுள்ளன.

மாளிகைக்கு வெளியே மூன்று றொக்கெட்டுகள் தரையிறங்கியதாகத் தெரிவித்த உள்நாட்டமைச்சின் பேச்சாளர் மிர்வாய்ஸ் ஸ்டனிஸ்காய், உடனடியான காயம் எதுவும் இருப்பதாக அறிக்கைகள் இல்லை எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், தாங்கள் தாக்குதலில் பங்கெடுத்ததை தலிபான்கள் மறுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .