Editorial / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இஸ்லாமாபாத்:
ஐஎஸ்ஐஎஸ். போன்ற பயங்கரவாதக் குழுக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானை தமது தளமாக பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் சர்வதேச சமூகம் தலிபான்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு பிரபல நேர்காணலில்; இம்ரான்கான் கருத்துத் தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீர் போன்றவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் உய்குர் இன மக்களை சீனா நடத்தும் முறை பற்றிய அமெரிக்காவின் குற்றச்சாட்டு பற்றியும் பேசினார்.
தலிபான்களுடன் சர்வதேச சமூகம் தொடர்புகொள்ளத் தவறினால் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றி பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்தார்.
அந்த பயங்கரவாதக் குழுவில், கடும்போக்காளர்கள் இருப்பதால், இந்தக் குழு வெகுசுலபமாக மீண்டும் 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைக்கு போகக்கூடும். அது ஒரு பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார். இந்த நிலையானது நாட்டை மிகுந்த குழப்பத்துக்கு உள்ளாக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு அதுவொரு வளமான தளமாகிவிடும். இது பிராந்தியத்திலுள்ள எல்லா நாடுகளுக்கும் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பாகும் என்றும் அவர் சொன்னார்.
அமெரிக்க கொள்கையான ட்ரோன் தாக்குதல்களை பயங்கரவாதத்துக்கு எதிராக நடத்துவதானது மிகவும் பைத்தியக்காரத்தனம் என்று அவர் கூறினார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானில் தளம் அமைக்க அமெரிக்காவை அனுமதிப்பீர்களா என்று கேட்டதற்கு இம்ரான்கான் 'நான் நினைக்கின்றேன் அவர்களுக்கு இங்கு ஒரு தளம் தேவையில்லை. ஏனென்றால் நாங்கள் மீண்டும் அந்த மோதலில் ஒரு பங்குதாரராக இருக்க விரும்பவில்லை என்று கூறினார்.
7 minute ago
43 minute ago
50 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
43 minute ago
50 minute ago
53 minute ago