2021 ஜூலை 28, புதன்கிழமை

‘ஆயுததாரிகளால் 53 பேர் கொல்லப்பட்டனர்’

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 12 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


நைஜீரியாவின் வடமேற்கு ஸம்ஃபாரா மாநிலத்தில், ஆயுதந்தரித்த தாக்குதலாளிகளால் 53 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸாரும், உள்ளூர்வாசிகளும் தெரிவித்துள்ளனர். 

கடவா, கவாட்டா, மடுபா, கன்டா சமு, சலவா, அஸ்கவா ஆகிய கிராமங்கள் உள்ள ஸுர்மி மாவட்டத்தையே மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அங்குள்ளவர்களை தாக்குதலாளிகள் சுட்டதுடன், விவசாயிகளைத் தாக்கியும் உள்ளனர். 
வேட்டைக்காரர்களாலேயே பெரும்பாலும் இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .