2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

சீற்றத்துடன் குழம்பைக் கக்கும் எரிமலை

Freelancer   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெயினின் லா பல்மா தீவிலுள்ள கும்ரே வீஜா எரிமலை சீற்றத்துடன் லாவா குழம்பைக் கக்கி வருவதால் அப்பகுதியில் வசித்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

சீற்றத்துடன் காணப்பட்ட எரிமலை, கடந்த மாதம் 19ஆம் திகதி வெடிக்கத் தொடங்கிய நிலையில் தற்போது தொடர்ந்து சீற்றத்துடன் லாவா குழம்பை கக்கி வருகிறது. 

எரிமலையிலிருந்து வெளிப்படும் லாவா குழம்பு, மலை முகட்டிலிருந்து ஆறுபோல் வழிந்தோடி வருவதால் எரிமலையை அண்டிய 4 கிராமங்களில் உள்ள வீடுகள் உட்பட 1000க்கும் அதிகமான கட்டிடங்களும், சுற்றியுள்ள நிலங்களும் அழிந்துவிட்டன.

லாவா குழம்பு சீற்றத்துடன் வெளியேறுவதை அப்பகுதி மக்கள் அச்சம் கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். 

இதேவேளை, எரிமலை சீற்றத்தால் வானில் படர்ந்த சாம்பல் சற்று குறைந்ததையடுத்து, லா பல்மா தீவில் உள்ள விமான நிலையம் திறக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்படுவதுடன், கேனரி தீவுகளின் ஏனைய விமான நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .