2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

கிஷிடாவுக்கு பானிபூரி கொடுத்த மோடி

Ilango Bharathy   / 2023 மார்ச் 21 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறைப்  பயணமாக நேற்றுமுன்தினம்  இந்தியா வந்தடைந்தார்.

இதன்போது அவருக்கு  டெல்லி விமான நிலையத்தில் வைத்து  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து  டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் மோடியை  அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது  புமியோ கிஷிடாவுக்கு சந்தன மர புத்தர்  சிலையொன்றை மோடி பரிசாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவுக்குச்  சென்ற கிஷிடா, பிரதமர் மோடியுடன் பூங்காவை பார்வையிட்டார்.

பின்னர் அங்கே அமைக்கப்பட்டிருந்த பானி பூரி கடையில் மோடியுடன் சேர்ந்து பானி பூரியை ரசித்து ருசித்து உண்கொண்டார்.

இது குறித்த புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .