2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

’தடுப்பூச்சி ஏற்றிக் கொள்ளாதோருக்கு சிறை’

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 22 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி ஏற்றிக் கொள்ள மறுப்போரை சிறைக்கு அனுப்ப போவதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்றிகோ டுட்டர்ட்டே அச்சுறுத்தியுள்ளார்.

டெல்டா மாறியுடன் தொடர்புபட்ட புதிய கொரோனா தொற்றுக்கள் தொடர்பாக பிலிப்பைன்ஸின் எல்லைக் கட்டுப்பாடுகளை உயர் எச்சரிக்கையுடன் அந்நாட்டு அரசாங்கம் வைத்துள்ள நிலையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட நேற்று இரவு உரை ஒன்றிலேயே, “நீங்கள் தெரிவு செய்யலாம்; நீங்கள் தடுப்பூசியைப் பெறலாம் அல்லது உங்களை சிறைச்சாலைக்கு நான் அனுப்புவேன்” என தகலொக்கில் ஜனாதிபதி டுட்டர்ட்டே தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு மார்ச் மாதம் தடுப்பூசியேற்றலை பிலிப்பைன்ஸ் ஆரம்பித்த போதும், தடுப்பூசியேற்றல்கள் குறைவாகவே காணப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசியேற்றாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இந்தியாவுக்கு அல்லது ஐக்கிய அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி டுட்டர்ட்டே தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .