2022 ஜனவரி 22, சனிக்கிழமை

வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டிய நபர்; பதறியடித்து ஓடிய மக்கள் (வீடியோ)

Ilango Bharathy   / 2021 நவம்பர் 15 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்திற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மான்ஹாட்டன் என்ற நகரில்  உள்ள ஒரு உணவகமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று குறித்த நபர்  ”இன்னும் இரண்டே நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது, நீங்கள் அனைவரும் என்னோடு சேர்ந்து சாகப் போகிறீர்கள்” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனால், பயத்தில் அங்கிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடியுள்ளதாகவும் இதனையடுத்து குறித்த நபர் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து வெளியான வீடியோ இணையத்தில் வைரலாகவே பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

விசாரணையின் போது Malik Sanchez என்ற  அந்நபர்  யூடியூபர் என்றும் இவ்வாறான வீடியோக்களை அவர் இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார் என்பதும் தெரியவந்தது.

 இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X