2022 ஜனவரி 22, சனிக்கிழமை

ஈக்குவடோர் சிறைச்சாலை வன்முறையில் 68 பேர் பலி

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 15 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈக்குவடோரின் பெனிடென்சியாரியா டெல் லிடோரல் சிறைச்சாலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வன்முறையில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டதுடன், 25 பேர் காயமடைந்ததாக ஈக்குவடோர் அரசாங்கம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எதிரிக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலே இது என அதிகாரிகள் இதை வகைப்படுத்தியுள்ளனர்.

தென் நகரான குவாயகுய்லிலுள்ள குறித்த சிறைச்சாலையிலேயே இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்தில் 119  சிறைக்கைதிகள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வேறு இரண்டு சிறைச்சாலைகளில் உணவுத் தவிர்ப்பில் சிறைக்கைதிகள் ஈடுபட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X