2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 22 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலந்தில் வசித்து வரும் ப்ரோமோ எனும் 83 வயதான  மூதாட்டியை பாகிஸ்தானைச் சேர்ந்த  28 வயதான இளைஞர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ் புக் மூலம் நண்பர்களாகப் பழகிய இவர்கள் இருவரும் நாளடைவில் காதலர்களாக மாறியதாகவும், சுமார் 6 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இளைஞருக்கு அவருடைய பெற்றோர்கள் 18 வயது  நிறம்பிய பெண்ணொருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததாகவும், எனினும் அவர்  ப்ரோமோவையே திருமணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X