2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

காதுக்குள் கேட்ட விநோத சத்தம்; அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சூஜோவைச் சேர்ந்த யி (Yi )என்ற பெண், தனது காதிற்குள் விசித்திரமான சத்தம் கேட்பதாகவும் அசௌகரியமாக உணர்வதாகவும் கூறி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். 

அவரைப் பரிசோதித்த வைத்தியர் அவரது காதிற்குள் சிலந்தியொன்று உயிரோடு இருந்ததைக்  கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து அவரது காதிற்குள் ஒரு கெமராவைச் செலுத்திப் பார்த்த போது, அச்சிலந்தி அளவில்  மிகவும் பெரியதாக இருந்ததாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பெண்ணின் காதிற்குள் சிலந்தி ஏறக்குறைய ஒரு இரவு முழுவதும் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எலெக்ட்ரிக் ஓட்டோஸ்கோப்பைப் பயன்படுத்தி சிலந்தியை அவரது காதிலிருந்து வைத்தியர்  அகற்றியுள்ளார்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X