2022 ஜூலை 07, வியாழக்கிழமை

நடுவானில் திடீர் விமானியான அனுபவமில்லாப் பயணி

Ilango Bharathy   / 2022 மே 13 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் விமானத்தை இயக்கும் அனுபவமே இல்லாத நபர் ஒருவர், விமானத்தைப்  பத்திரமாகத்  தரையிறக்கிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் லியோனார்ட் எம். தோம்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புளோரிடாவை நோக்கி 2 பயணிகளுடன் புறப்பட்ட  சிறிய ரக விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவதினத்தன்று  குறித்த  விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு செயலற்று கிடந்துள்ளார்  எனவும், இதனையடுத்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பயணி ஒருவர் விமானத்தை இயக்க முடிவு செய்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்ந்து இணைப்பில் இருந்தபடி, அவர்கள் கூறுவதை கேட்டு  விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .