2023 செப்டெம்பர் 29, வெள்ளிக்கிழமை

தொடர்பாடலுக்குத் தடை?

Ilango Bharathy   / 2022 ஜூலை 06 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக்காலமாக கடுமையான பொருளாதார வீழ்ச்சியை  பாகிஸ்தான் அரசு  சந்தித்து வருகின்றது.
குறிப்பாக அந்நாட்டில் நிலவி வரும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி கணிசமான அளவு குறைந்துள்ளது.இதன்  காரணமாக தொலைபேசி மற்றும் இணைய சேவைகளை நிறுத்த நேரிடலாம் எனப் பாகிஸ்தான் தேசிய தகவல் தொழில்நுட்ப வாரியம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், ” ஜூலை மாதத்தில் நாட்டில் மின்வெட்டு அதிகரிக்கலாம் என எச்சரித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ் அறிவிப்பானது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .