Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நைஜீரியாவின் ஓயோ மாகாணத்தில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 800 கைதிகள் தப்பியோடியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற இத்தாக்குதலில் சிறையைச் சுற்றிவளைத்த பயங்கர வாதிகள் குண்டுகளைக் கொண்டு சிறைச் சுவர்களைத் தகர்த்து, கைதிகளைத் தப்ப வைத்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தப்பிச் சென்றவர்களில் 262 பேரை மீண்டும் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் ஏறத்தாழ 575 பேரைத் தேடும் பணி இடம்பெற்றுவருவதாகவும் அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நைஜீரியாவில் இவ்வருடத்தில் 3 ஆவது முறையாக சிறை தகர்க்கப்பட்டு கைதிகள் தப்பிச்சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
20 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
4 hours ago