2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பட்டத்தை உதறித்தள்ளிய மகாராணி

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 22 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் இவ் வருடத்திற்கான சிறந்த வயதான பெண் என்ற பட்டத்தினை ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பிரித்தானிய அரச குடும்பத்தில் அரசியாக நீண்ட காலமாக இரண்டாம் எலிசபெத் (வயது 95)  வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவ் வருடத்திற்கான சிறந்த மூத்த பெண்மணி என்ற பட்டத்தினை மகாராணி எலிசபெத்துக்கு வழங்க பிரபல பிரித்தானிய  பத்திரிகை ஒன்று முடிவு செய்ததாகவும், எனினும் மகாராணி”முதுமை என்பது எண்ணத்தைப் பொறுத்தது. நான் இப் பட்டத்திற்குத் தகுதியானவர் அல்ல. எனவே தகுதி வாய்ந்த வேறு ஒருவருக்கு இப் பட்டத்தை வழங்குங்கள்” எனக் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .