2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

ஏலத்தில் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு

Ilango Bharathy   / 2021 நவம்பர் 25 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்பியலில் பல சாதனைகள் புரிந்த விஞ்ஞானிகளில் முக்கியமானவர் அல்பர்ட் ஐன்ஸ்டீன்.  இவரது சார்பியல் கோட்பாடு இப்போதும் இயற்பியலில் ஒரு மைல்கல்லாக உள்ளது.

இக் கோட்பாட்டை ஐன்ஸ்டீன் மற்றும் அவரது நண்பர் பெஸ்ஸோ இணைந்து கடந்த  1913 முதல் 1914ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்குள் எழுதியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

 இந்நிலையில் ஐன்ஸ்டீனின்  கைப்பட எழுதிய குறித் சார்பியல் கோட்பாடானது   பிரான்ஸின் தலைநகர்  பரீஸில் அண்மையில்  ஏலத்திற்கு விடப்பட்டது.

பலரும் முண்டியடித்துக் கொண்டு ஏலத்தில் போட்டியிட்ட நிலையில் இறுதியாக அக்  கையெழுத்து பிரதி 11 மில்லியன் யூரோவுக்கு (இலங்கை மதிப்பில் சுமார் 250 கோடியே 51 இலட்சம்)  ஏலம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X