Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 மார்ச் 08 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பால்நிலை சமத்துவமானது எமது கண் முன்னே மறைந்து கொண்டிருக்கிறது. மேலும் ஐ.நா பெண்கள் அமைப்பின் மதிப்பீட்டுப் படி பால்நிலை சமத்துவம் இப்போதைய உலகிலிருந்து 300 ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றது என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ், ஜெனிவாவிலுள்ள ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடந்த திங்கட்கிழமை சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்
உலகின் பெரும்பாலான நாடுகள் இனப்பெருக்க உரிமைகள், பிரசவத்தின் போதான தாய் இறப்பு விகிதம், பால்ய திருமணங்கள், கல்வி மறுக்கப்படுதல் போன்ற விடயங்களில் இன்னும் பின்வாங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்
அன்டோனியோ ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளை பெயரிட்டு , அங்கு பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்பட்டதாகக் கூறினார்
தசாப்தங்கள் கடந்த ஆணாதிக்க , பாகுபாடுகள் நிறைந்திருந்த உலகமானது விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தில் பெரும் பாலின இடைவெளியை உருவாக்கியுள்ளது. சர்வதேச கட்டமைப்புகள் பெண்களுக்காக உழைப்பதில்லை. இந்த நிலைமை மாற வேண்டும் என அவர் தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago