2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

அணுசக்தி தாக்குதலே இலக்கு என்கிறது சீனப்பத்திரிகை

Editorial   / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன கம்யூனிஸ்ட் கட்சியினால் நடத்தப்படும் செய்திப் பத்திரிகையொன்று அவுஸ்திரேலியா, அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்களை உருவாக்க  அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் (AUKUS pact) அக்கூஸ் ஒப்பந்தத்தை தொடங்கியபின்னர் அணுசக்தி தாக்குதலுக்கு தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேற்படி கட்சியின் கட்டுப்பாட்டில் நடத்தப்படும் குளோபல் டைம்ஸ் (The Global Times) பத்திரிகை இது தொடர்பாக  எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அதில், இந்த முத்தரப்பு ஒப்பந்தம் சீனாவை எதிர்கொள்ளவே அமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க அழைக்கப்படாதமை பிரான்ஸூக்கு கோபம் ஏற்பட காரணமாகியது. அணுசக்தியை எதிர்க்கும் நியூஸிலாந்தில் அமைதியின்மை ஏற்பட்டது, என்று குறிப்பிட்டுள்ளது.

அப்பத்திரிகையின் பிரசார பகுதியில், அணுசக்தி ஒப்பந்தம் அவுஸ்திரேலியாவை அணு ஆயுத இலக்காக மாற்றும் என்னும் தலைப்பில் கட்டுரையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையில், அக்கூஸ் ஒப்பந்தம் அவுஸ்திரேலியாவை ஒரு அணுசக்தி இலக்காக மாற்றும் என்று சீன இராணுவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

 சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ஸாவோ லிஜியான், அமெரிக்க இராணுவம் கொவிட்-19 சீனாவின் வுஹானிலேயே உருவானதாக பொய் பிரசாரத்தை செய்தது. அக்கூஸ் ஒப்பந்தம் பிராந்திய அமைதியை கெடுக்கிறது. ஆயுதப்போட்டியை தீவிரப்படுத்துகிறது.

அணு ஆயத பரவல் ஒப்பந்தத்துக்கு  குறைந்த மதிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.   அக்கூஸ் ஒப்பந்த வளர்ச்சியில் சீனா மிகுந்த கவனத்தை செலுத்தும்.    சம்பந்தப்பட்ட நாடுகள் தம் பனிப்போரையும்,  பூஜ்ய தொகை விளையாட்டு மனநிலையையும் கைவிடவேண்டும்.  தவறினால் அவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கை ஏற்படுத்தும் வகையிலான  ஒரு நிலையை உருவாக்குவார்கள் என்று ஸாவோ மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .