2025 நவம்பர் 19, புதன்கிழமை

வீட்டில் கஞ்சா வளர்க்க இத்தாலியில் அனுமதி

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 16 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறிய அளவில் கஞ்சாச் செடிகள்  வளர்ப்பதற்கு சட்டபூர்வமாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த சட்டத்தில் புதிய திருத்தமொன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அந்நாட்டில் மக்கள் தமது சொந்தத் தேவைக்காக வீட்டிலேயே நான்கு கஞ்சாச் செடிகள் வரை வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அந்நாட்டில்   கஞ்சாக் கடத்தல் மற்றும் கையாளுதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய குற்றங்களுக்கான அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கு அதிகபட்ச சிறைத் தண்டனையாக 6 முதல் 10 ஆண்டுகள் வரை வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இத்தாலிப் பாராளுமன்ற உறுப்பினர் ரிக்கார்டோ மகியால் (Riccardo Magi) முன்வைக்கப்பட்ட இந்த திருத்தம் காரணமாக, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக உள்நாட்டுக் கஞ்சாச் சாகுபடியை சட்டப்பூர்வமாக்கிய ஐரோப்பாவின் முதல் நாடாக  இத்தாலி மாறியுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X