2022 ஜூலை 02, சனிக்கிழமை

புடினைக் கொலை செய்யச் சதித்திட்டம்

Ilango Bharathy   / 2022 மே 26 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைப்  கொலை செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்னர்  சதித் திட்டமொன்று தீட்டப்பட்டதாக  உக்ரேன் பாதுகாப்புத் துறை அதிகாரியான கைரிலோ புதானோவ் தெரிவித்துள்ளார்.

பிரபல ஊடகமொன்றுக்கு  அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”காக்கசஸ் (Caucasus ) பிரதிநிதிகள் சிலரால் புடினைக் கொல்ல சதி நடந்ததாகவும் எனினும்   இச் சதியில் இருந்து புடின் உயிர் தப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
காக்கசஸ்  எனப்படுவது கருங் கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் உள்ள பிராந்தியம் ஆகும்.

இதில் ஆர்மேனியா, ஜார்ஜியா, ரஷ்யாவின் சில பகுதிகள் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .