2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

அடிக்கு மேல் அடி வாங்கும் நெட்ஃபிளிக்ஸ்

Ilango Bharathy   / 2022 ஜூலை 20 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}ஓ.டி.டி.தளங்களில் முன்னணி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ்(Netflix) நடப்பு ஆண்டின் 2ஆவது காலாண்டில் சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களை இழந்திருக்கும் நிலையில், பங்குச்சந்தையிலும் அந்நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் தங்கள் நெட்ஃபிக்ஸ் கவுச்சொல்லை  மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதே இவ்வீழ்ச்சிக்கான காரணம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் வீழ்ச்சியை ஈடுகட்டவும், மேலும் அதிக பயனர்களைத் தளத்திற்கு கொண்டுவரவும், மலிவு விலை சந்தாவை அறிமுகப்படுத்தி நடுவில் விளம்பரங்களைத்  தோன்றச் செய்து வருமானம் ஈட்ட அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கு 

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் நெட்ஃபிளிக்ஸ் கைக்  கோர்த்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .