2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கூகுள்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 06 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பக் பவுண்டி (Bug bounty) எனப்படுவது  செயலிகள், சேவைகள் அல்லது இயக்க முறைமைகளில் உள்ள பிழைகள் அல்லது பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிவதற்காகப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அல்லது நெறிமுறை ஹேக்கர்களுக்கு வழங்கப்படும் பண வெகுமதியாகும்.

பிழைக்கு வெகுமதிகள் வழங்கும் இம் முறையை,  தொழில்நுட்ப நிறுவனங்கள் பல  கொண்டுள்ளன.

அந்த வகையில், தற்போது கூகுள் நிறுவனம் ஒரு புதிய பக் பவுண்டி திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி கூகுளின் ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேரில் உள்ள பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு வெகுமதி வழங்குவதாகவும், பிழைகளின் தீவிரத்தை பொறுத்து இலங்கை மதிப்பில் 36,000 ரூபாய் முதல் 1.13 கோடி ரூபாய் வரை வெகுமதி வழங்கப்படும் எனவும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .