2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

போலியோ அணிக்கு பாதுகாப்பளித்த அதிகாரிகள் கொலை

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 10 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மேற்கு பாகிஸ்தானில், போலியோ தடுப்பு மருந்தேற்றல் பணியாளர்களை பாதுகாக்க அமர்த்தப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளை, மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போலியோக்கெதிரான நடவடிக்கையானது மேற்குலக சதித் திட்டமெனக் கூறுகின்ற பாகிஸ்தானிய போராளிகள், போலியோ அணிகள், அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் பொலிஸார் மீது தாக்குதல்களை வழமையாக நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

அல் கொய்தாவின் முன்னாள் தலைவர் ஒஸாமா பின் லேடனைக் கண்டுபிடிக்க போலித் தடுப்புமருந்தேற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெளிப்படுத்தப்பட்டதையடுத்து, இத்தாக்குதல்கள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .