2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

செல்பி எடுக்க முயன்றதால் விபரீதம்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 27 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொம்மை முதலை என நினைத்து செல்பி எடுக்க முயன்ற நபரை  முதலையொன்று  தாக்கிய சம்பவம் பிலிப்பைன்ஸில் இடம்பெற்றுள்ளது.

நெஹிமியாஸ் சிப்பாடா என அழைக்கப்படும் குறித்த நபர்  தனது 68ஆவது பிறந்த நாளைக் கொண்டாட அண்மையில் ககாயன் என்ற இடத்தில் உள்ள கேளிக்கைப் பூங்காவிற்குச் சென்றுள்ளார்.

 அங்கு 12 அடி நீளத்திற்கு இருந்த முதலையைக் கண்ட அவர், அது பொம்மை என நினைத்து அது இருந்த குழிக்குள் இறங்கி செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார்.

இதன் போது எதிர்பாராதவிதமாக அந்த முதலை நெஹிமியாசின் கையைக் கடித்துப் பிடித்துக் கொண்டது. அப்போதுதான் உண்மையான முதலையிடம் சிக்கிக் கொண்ட விஷயம் அவருக்குத் தெரிய வந்துள்ளது.

எனினும் மனம் தளராத அவர் முதலையிடமிருந்து ஒருவாறு தன்னை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .