2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

கொரோனா: ஒரு பில்லியன் தடுப்பூசிகளை செலுத்திய சீனா

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 20 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு பில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை சீனா செலுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், உலகளாவிய ரீதியில் செலுத்தப்பட்டுள்ள அனைத்துத் தடுப்பூசிகளிலும் மூன்றிலொன்றுக்கு இது அதிகமாகும்.

கொரோனா தொற்றுக்கு உள்ளானோரை வெற்றிகரமாக அதிகாரிகள் குறைத்ததை அடுத்து, சீனாவின் தடுப்பு மருந்து ஏற்றலானது மெதுவாகவே ஆரம்பித்திருந்தது. ‘

எனினும், இலவச முட்டைகள் போன்ற  ஊக்குவிப்புகள், டெல்டா மாறி பரவல் ஒன்று காரணமாக தடுப்பு மருந்து ஏற்றலானது வேகப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்துக்குள் சீனாவின் 1.4 பில்லியன் சனத்தொகையின் 40 சதவீதத்துக்கு முழுமையாக தடுப்புமருந்தேற்றுவதை சீன அதிகாரிகள் இலக்காகக் கொண்டுள்ளனர்.

சீனாவில் மக்களுக்கு அந்நாட்டுத் தயாரிப்புகளான சினோஃபார்ம், சினோவக் உள்ளடங்கலான தடுப்புமருந்துகள் வழங்கப்படுகின்றனர். இவையிரண்டும் இரண்டு தடவைகள் செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முடக்கங்கள், பாரியளவு சோதனையை அடுத்து பெரும்பாலோனோர் தடுப்பூசி ஏற்றுக் கொள்வதற்கான தேவையை குறைவாகவே உணர்ந்திருந்தனர். தவிர, முன்னைய தடுப்பூசி பிரச்சினைகளாலும் சிலர் அச்சமடைந்திருந்தனர்.

இந்நிலையில், இறுதி 100 மில்லியன் தடுப்பூசிகளை ஏற்ற ஐந்து நாள்களையே எடுத்துக் கொண்டதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .