2022 ஜனவரி 22, சனிக்கிழமை

மேலும் 7 லட்சம் போ் உயிரிழக்கும் அபாயம்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 25 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் சில மாதங்களில் ஐரோப்பாவின் 53 நாடுகளில் மேலும் 7 லட்சம் போ் கொரோனாத் தொற்றினால் உயிரிழக்கும் அபாயம் நிலவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொரோனாவுக்கு எதிரான மக்களின் நோயெதிா்ப்புத் திறன் குறைந்து வருவதற்கான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் ஒரு பகுதியாக இன்னும் அதிகமானவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

இரு தவணை கொரோனா தடுப்பூசிகளுக்குப் பிறகு 3-ஆவதாக ‘பூஸ்டா்’ தடுப்பூசிகளைப் பெறுவதற்கு, 60 வயதுக்கு மேற்பட்ட சுகாதாரப் பணியாளா்கள் போன்ற மரண அபாயம் நிறைந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X