Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 17 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலூன் ஒன்றினால் நகரமொன்று மின்சாரமின்றி ஸ்தம்பிதம் அடைந்த சம்பவம் கடந்த 13 ஆம் திகதி ஜேர்மனியின் டிரெஸ்டன் (Dresden) நகரில் இடம்பெற்றுள்ளது.
இதனால் சுமார் 3 இலட்சம் குடியிருப்புகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் எனப் பல பகுதிகள் பாதிப்படைந்ததாகவும்,
அதோடு போக்குவரத்து விளக்குகள், டிராம் போக்குவரத்து ஆகியன செயலிழந்து போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்சாரத் தடைக்கான காரணம் என்ன எனத் தெரியாமல் அதிகாரிகள் திணறிய நிலையில், இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது மின்சாரத்தடைக்கான காரணம் ஒரு பலூன் எனத் தெரியவந்துள்ளது.
பலூன் ஒன்றில் சுற்றப்பட்டிருந்த உலோகம் பூசப்பட்ட பகுதி மின்சாரம் பகிர்ந்தளிக்கும் முக்கிய பகுதியில் மோதியதாலேயே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ள நிலையில் இது திட்டமிட்ட செயலா அல்லது தற்செயலாக நடந்ததாக என்பது குறித்துப் பொலிஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025