2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சவுதி மன்னரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த இளவரசர் சல்மான் ?

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவுதி மன்னர் அப்துல்லா உடல் நலக் குறைவு காரணமாக 2015 ஆம் ஆண்டு காலமானார்.

இந்நிலையில் ”மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை, இளவரசர் முகமது பின் சல்மான் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக”  அந்நாட்டின் முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்த  கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சவுதி அரேபியாவில் இருந்து தப்பி கனடாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் புலனாய்வு அதிகாரியான அல்ஜாப்ரி என்பவரே பிரபல ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”சவுதி இளவரசர் குறித்த பல ரகசியங்கள் என்னிடம் உள்ளன. தனது தந்தையை அரியணையில் ஏற்றுவதற்காக மன்னர் அப்துல்லாவை கொல்ல இளவரசர் திட்டமிட்டிருந்தார்.

 இதற்காக ரஷ்யாவிலிருந்து விஷம் பொருந்திய மோதிரமொன்றையும்  வாங்கியிருந்தார். இதன் மூலம் கைகுலுக்கி மன்னரைக் கொல்லவும் அவர் தீர்மானித்திருந்தார்.


இப்போது அவர் நான் கொல்லப்பட வேண்டும் என்று நினைக்கிறார். ஏனெனில் எனது தகவல்களால் அவர் அச்சமடைகிறார். நான் நிச்சயம் ஒரு நாள் கொல்லப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் அல் ஜாப்ரியின் குற்றச்சாட்டை  மறுத்துள்ள இளவரசர் சல்மான் ”நிதி விவகாரத்தில் அவர் தவறுகளில் ஈடுபட்டதால் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக இது போன்ற புகார்களை அவர் கூறிவருவதாகவும்” தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .